6 பேர் விடுதலை: "சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது" - சீமான்

ராஜிவ் காந்தி வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-11-11 10:42 GMT

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவி ல்,

"ராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்