ராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை

விளையாட்டு போட்டியில் ராஜா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-10-16 18:47 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 11 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மண்டபம் அருகே உள்ள ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் தரவரிசை புள்ளிகளை அதிகம் பெற்று ஒட்டுமொத்த பரிசுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் டி.ராஜா, கல்லூரி நிர்வாகத்தலைவர் ஆர்.ஜெயந்தி ராஜா, கல்லூரி செயலாளர் டாக்டர் ஆர். தில்லை ராஜ்குமார் ஆகியோர் இணைந்து மாணவிகளை பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஏ.சவுமியா, கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி செயலாளர் டாக்டர் ஆர்.தில்லை ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்