அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-10-28 17:33 GMT

கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றிய அளவிலான கலை மற்றும் பண்பாடு சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஓவியம், களிமண் சிற்பம், நாட்டுபுற பாடல், செவ்வியல் பாட்டு, நாட்டுப்புற நடனம், தனிநபர் நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றறன. கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கெண்டனர். இதில் கே.வி.குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களை தலைமை ஆசிரியை ராணி பாராட்டி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுவினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்