விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் போளிப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே போளிப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் ஜூனியர் பிரிவில் 600 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும், சீனியர் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம், 800 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்து மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்ரெட்டி மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.