சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைெபற்றது.

Update: 2023-05-10 19:03 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் படி அண்ணா திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், அவைத்தலைவர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் மணி வரவேற்றார். கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சாகுல்கமீது, மாநிலநெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, விளையாட்டு அணி துணை அமைப்பாளர்கள் கோகுல், இளங்கோ, மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் அமைப்பாளர் அண்ணாதுரை, வார்டு செயலாளர் டேனியல் உள்பட நகர, தெற்கு, வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் நாகப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்