பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2022-09-01 19:54 GMT

சிவகாசி, 

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.

தடகளப்போட்டிகள்

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கு 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

மாணவிகளுக்கு 100, 200, 400, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 467 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உடற்கல்வித்துறை தலைவர் ஜான்சன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெகநாதன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

சிவகாசி எஸ்.என்.என்.வி. பள்ளி மாணவன் கார்த்திக் மாணவர்களுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாஹினி மாணவிகளுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். முடிவில் உடற்கல்வித்துறை இணைபேராசிரியர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்