ஆச்சிராமவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆச்சிராமவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-19 19:09 GMT

தா.பேட்டை:

தா.பேட்டையில் ஆச்சிராமவல்லி அம்மன், நம்பியப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பச்சை பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காப்புக்கட்டுதல், புனிதநீர் எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், பூர்ணாகுதி, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், நாடிசந்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யாக வேள்விகளும் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கோவிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து பச்சை பூஜை விழாவை முன்னிட்டு செவந்தம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவில் வளாகத்தில் சக்திபாலித்தல், சுவாமி அழைத்தல், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சுவாமிகள் பரிவார தெய்வங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்