அச்சமங்கலம் ஊராட்சி மன்ற கூட்டம்
அச்சமங்கலம் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே உள்ள அச்சமங்கலம் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.20 லட்சத்திற்கான பணிகளை தேர்வு செய்வது குறித்தும், ஊராட்சியில் குடிநீர், கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும், ஏ.ஜி.ஏ.எம்.டி.யில் ரூ.48 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோனை செய்யப்பட்டது.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சின்னபாப்பா அன்பழகன், உறுப்பினர்கள் ஸ்ரீதர், சிங்காரம், ஜெயக்கொடி, சுரேஷ், சசிகலா, சிவகாமி, திலீப்குமார், விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.