மோட்டார்சைக்கிள் மரத்தில் மோதி 2 வாலிபர்கள் சாவு

Update: 2023-03-16 16:12 GMT


குடிமங்கலத்தில் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி மரத்தில் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோட்டார் சைக்கிள்

திருப்பூர் மாவட்டம்குடிமங்கலம் அருகே உள்ள பூளவாடியை சேர்ந்தவர்கள் பிரபு மற்றும் சரவணக்குமார். இவர்கள் இருவரும் குடிமங்கலம் நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

இவர்களை பார்க்ககுடிமங்கலம் அருகே உள்ள பூளவாடியை சேர்ந்த கனகராஜ் மகன் சிவக்குமார் (வயது29), அதேபகுதியை சேர்ந்த சின்னான் மகன் சேகர் (28) இருவரும் சேகருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளில்குடிமங்கலம் நால்ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை சிவக்குமார் ஓட்டி வந்தார். குடிமங்கலம் நால்ரோட்டின் அருகே வந்தபோது நிலை தடுமாறி ரோட்டின் அருகே இருந்த மரத்தின் மீது இவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற சிவக்குமார், சேகர் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த சேகர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சேகரும் உயிரிழந்தார். விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்