வேனில் கண்ணாடி ஏற்றி சென்ற போது விபத்துசுமைதூக்கும் தொழிலாளி பலி
வேனில் கண்ணாடி ஏற்றி சென்ற போது சுமைதூக்கும் தொழிலாளி பலியானார்.
மதுரை கீரைத்துறை வட்டக்குடி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55), சுமைதூக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று மதுரையில் கண்ணாடி கடையில் இருந்து பெரிய கண்ணாடிகளை சரக்கு வேனில் ஏற்றி சென்றார். வேனில் அவர் கண்ணாடிகளுடன் நின்று அவற்றை பிடித்துக்கொண்டு சென்றார். வேன் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று விபத்து ஏற்பட்டது. அப்போது கண்ணாடிகளுடன் மோதி நாகராஜன் படுகாயம் அடைந்தார். அதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.