விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

அதிராம்பட்டினம் அருகே சாலை விரிவாக்கத்துக்காக பாலம் அமைக்கும் பகுதிகளில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-08 20:51 GMT

அதிராம்பட்டினம்,

அதிராம்பட்டினம் அருகே சாலை விரிவாக்கத்துக்காக பாலம் அமைக்கும் பகுதிகளில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை முதல் கீழத்தோட்டம் வரை சாலை விரிவாக்கத்துக்காக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை கல்லூரி முக்கம் முதல் கீழத்தோட்டம் வரை சாலைகள் மிக மோசமாக இருந்து வந்த நிலையில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பள்ளங்கள் போடப்பட்டு அதன் மீது மண், ஜல்லி கொட்டப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து எச்சரிக்கை பலகை

இந்த பகுதியிலிருந்து ஏராளமான மீனவர்கள் இந்த சாலை வழியாக மீன் மார்க்கெட் , துறைமுகம் செல்வதற்கும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் என ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்தநிலையில், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளத்தின் அருகில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.எனவே, சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்