வீட்டுக்குள் பஸ் புகுந்து விபத்து

சோளிங்கர் அருகே தனியார் பஸ் ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-10-09 17:05 GMT

சோளிங்கர் அருகே தனியார் பஸ் ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக்குள் பஸ் புகுந்தது

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து திருத்தணிக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் 40-கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி என்ற இடத்தின் அருகே சென்றபோது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பஸ்சில் பயணம் செய்தவர்களில் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்