தட்டப்பாறை அருகே விபத்து:மேலும் ஒருவர் சாவு

தட்டப்பாறை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் இறந்து போனார். பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

Update: 2023-01-17 18:45 GMT

தட்டப்பாறை:

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை தேவர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் பொன்பாண்டி பிரபு (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 10 பேருடன் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டு இருந்தார். கடந்த 11-ந் தேதி இரவு கேம்ப் தட்டப்பாறை அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளி அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பொன்பாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பொன்பாண்டி பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செட்டியூரணியை சேர்ந்த வேலாயுதம் மகன் சொரிமுத்து (52) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சொரிமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இது தொடர்பாக தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்