கோவில்பட்டி அருகே விபத்து:பள்ளி தலைமை ஆசிரியர் பலி

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீதுலாரி மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பலியானார்.

Update: 2023-08-04 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே ேமாட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி தலைமை ஆசிரியர் பலியானார்.

தலைமை ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கோவில்பட்டியில் உள்ள கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் எட்டயபுரம் நோக்கி வந்து ெகாண்டிருந்தார்.

அப்போது கழுகாசலபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரமேஷ், லாரி சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரதாபமாக இறந்தார்.

விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் அங்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பம்

இறந்த ரமேசுக்கு கீர்த்திகா ஜெயலட்சுமி (45) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கீர்த்திகா ஜெயலட்சுமி எட்டயபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆவார். தற்போது கயத்தாறு அருகே தெற்குகோனார் கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ேமாட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்