கயத்தாறு அருகே விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எங்கே? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கயத்தாறு அருகே விபத்து: லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி

Update: 2022-12-09 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எங்கே? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கொம்பையா. விவசாயி. இவருடைய மகன் சண்முகராஜ் (வயது 36). லாரி டிரைவர். இவர் கோவில்பட்டிக்கு சென்றிருந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் சண்முகராஜ் மோட்டார்சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வில்லிச்சேரி நாற்கர சாலையில் வந்தபோது ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாரல் மழை பெய்தது. மேலும் இருட்டாகவும் இருந்தது.

2 பேர் பலி

அப்போது நடந்து சென்றவர் மீது சண்முகராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சண்முகராஜீம், நடந்து சென்றவரும் ரோட்டில் விழுந்தனர். திடீரென பின்னால் வந்த வாகனம் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எங்கே? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொருவர் யார்?

இறந்து போன மற்றொருவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பலியான சண்முகராஜ்க்கு வெயிலாட்சி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற சண்முகராஜ் ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளார். அந்த ஹெல்மெட் சேதம் அடைந்து கிடந்தது.

வாகனம் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

----------------

Tags:    

மேலும் செய்திகள்