அரசுப் பேருந்துகள் மோதி விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் காயம்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளனது.;
திருச்சி,
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், இன்று அதிகாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளனது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசு விரைவு பேருந்தும், சாதாரண கட்டண பேருந்தும் சென்றது. அப்போது திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பால்பண்ணை அடுத்துள்ள சஞசீவி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னே சென்ற சொகுசு பேருந்து பிரேக் அடித்த போது, பின்னால் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
போட்டி போட்டு அரசு பேருந்துகளை ஓட்டியதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.