கடலூரில் விபத்து:லாரிக்கு அடியில் சிக்கிய நபரை மீட்ட பொதுமக்கள்மோட்டார் சைக்கிள் நொறுங்கியது

கடலூரில் லாரிக்கு அடியில் சிக்கிய நபரை பொதுமக்கள் மீட்டனர்.

Update: 2022-12-25 18:45 GMT

கடலூர் அண்ணாபாலம் சிக்னலில் இருந்து ஜவான்பவன் சாலையில் நேற்று மதியம் லாரி ஒன்று திரும்பியது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மீராஷா என்பவர் மீது லாரி மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர் லாரியின் முன் பக்கம் இரண்டு சக்கரத்தின் நடுவில் மோட்டார் சைக்கிளோடு சிக்கிக்கொண்டார். இதை அறியாத லாரி டிரைவர் வண்டியை ஓட்டினார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்துமாறு கூறினர். உடன் டிரைவர் லாரியை நிறுத்தியதும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து லாரிக்குள் சிக்கி இருந்த மீராஷாவை காயத்துடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லாரியில் சிக்கி இருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்