சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-18 18:45 GMT


சின்னசேலம், 

சின்னசேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் பட்டாசு வெடிக்கும் போது நீளமான ஊது பத்தி பயன்படுத்த வேண்டும், கால்களில் காலணிகள் அணிந்திருக்க வேண்டும், நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது, அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தீ விபத்து மற்றம் பேரிடர் காலங்களில் எவ்வாறு பொதுமக்களை காப்பாற்றுவது என்பது குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நிலைய அலுவலர் பரமசிவம், முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஆனந்தகுமார், ராமச்சந்திரன், பழனிவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்