பாலம்
மடத்துக்குளத்திலிருந்து வேடப்பட்டி வழியாக துங்காவி செல்லும் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த சாலையை அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக எம்.சாண்ட் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில் வேடப்பட்டி அருகில் சாலையில் குறுக்கிடும் மழைநீர் ஓடைக்கு மேல் உள்ள பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது.எதிரே கனரக வாகனங்கள் வரும்போது இந்த பகுதியைக் கடக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடையும் சூழல் உள்ளது. அத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று தடுமாறினாலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கோரிக்கை
எனவே இந்த குறுகலான பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.