பழுதாகி நின்ற லாரியால் விபத்து

பழுதாகி நின்ற லாரியால் விபத்து ஏற்பட்டது.

Update: 2023-08-15 19:10 GMT

கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று காலை ஜூஸ் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி அரவக்குறிச்சி வேலன்செட்டியூர் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி பழுதாகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பழுதாகி நின்ற லாரி தூக்கி வீசப்பட்டு சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு கம்பிமீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்