விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது27). இவர் கடந்த 1-ந் தேதி இரவு திருமருகல் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேஷ் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.