மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி புகைப்படக்கலைஞர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி புகைப்படக்கலைஞர் இறந்தார்.;

Update: 2022-07-23 16:43 GMT

குமார் 

மயிலாடுதுறை சித்தர்காடு சோழியதெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). திருமைஞானம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (32). புகைப்பட கலைஞர்களான இவர்கள் இருவரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் போட்டோ எடுத்து தொழில் செய்து வந்தனர். நேற்று முன்தினம் வேலையை முடித்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் பொறையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபாகரன் ஓட்டினார். திருக்கடையூர் ஆர்ச் மெயின் ரோட்டில் சென்றபோது சிதம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த குமார் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்