கோபி அருகே கார் கவிழ்ந்து விபத்து- 3 பேர் காயம்
கோபி அருகே கார் கவிழ்ந்து விபத்து- 3 பேர் காயம்
கடத்தூர்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). அவருடைய மனைவி பாரதி (39). இவருடைய மகன் வசந்தகுமார் (13). இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் கரூர் மாவட்டம் கணபதிபாளையத்தில் உள்ள குலதெய்வமான குலவிளக்கு அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கோபி அருகே உள்ள தாசம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமுள்ள விவசாய நிலத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்.