ஆத்தூர் அருகே கார் மோதி தையல் தொழிலாளி சாவு

ஆத்தூர் அருகே கார் மோதி தையல் தொழிலாளி இறந்தார்.

Update: 2023-05-17 21:41 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள மத்துரூட்டு கிராமம் பூசாரியூர் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 38). தையல் தொழிலாளியான இவர், கந்தசாமிபுதூர் கிராமத்தில் கடை நடத்தி வந்தார். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று மாலை செல்லதுரை கந்தசாமிபுதூரில் இருந்து மல்லியகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்லதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லதுரை பலியானார். இந்த விபத்து குறித்து மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை, கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்