திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-01 21:00 GMT

திண்டுக்கல் அருகே ரெண்டலபாறையை சேர்ந்தவர் ஜோசப் (வயது 50). மில் தொழிலாளி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில் நேற்று ரெட்டியபட்டியில் மே தினத்தையொட்டி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல்-நத்தம் சாலையில் ரெட்டியபட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டியை நோக்கி சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜோசப் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ஜோசப்புக்கு தனமேரி (45) என்ற மனைவியும், சியாமளா (28) என்ற மகளும், ஜோன்சன் (25) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்