மினிவேன் கவிழ்ந்து விபத்து; 15 பேர் படுகாயம்

தேவகோட்டை அருகே தடுப்புச்சுவரில் மினிவேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-01 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே தடுப்புச்சுவரில் மினிவேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

15 பேர் படுகாயம்

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் அருகே கிளியூர் விலக்கு சாலை உள்ளது. இந்த சாலை வளைவான சாலையாகும். இந்த வளைவு சாலையின் நடுவில் கடந்த ஆண்டுக்கு முன் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தடுப்பு சுவர் இருப்பது குறித்த எந்தவித எச்சரிக்கை பலகைகளோ ஒளிரும் விளக்குகளோ கிடையாது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் நிலை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு தடுப்பு சுவற்றில் வேன் ஏறி டயர்கள் வெடித்து அதே இடத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற மினிவேன் அந்த தடுப்பு சுவர் மீது ஏறி டயர் வெடித்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 11 பெண்கள் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் ஜெயபால் (வயது 30) என்பவரும் காயம் அடைந்தார். விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிளியூர் சேகர் கூறியதாவது, அதிகாலை நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்த வளைவின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் இருப்பது தெரியாததால் அதன் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த தடுப்பு சுவரை முழுமையாக அகற்ற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்