பஸ்-கார் மோதல்; கேரள தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே பஸ், கார் மோதிய விபத்தில் கேரள தம்பதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2023-04-26 21:00 GMT

கேரள மாநிலம் மூணாறு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பென்னி (வயது 50). இவரது மனைவி சீஜா (45). இவருக்கு கண் சிகிச்சை செய்வதற்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பென்னி முடிவு செய்தார். அதன்படி, நேற்று பென்னி, தனது மனைவியை காரில் அழைத்துக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை அவர்களது மகன் நிதின் (22) ஓட்டினார்.

அவர்கள் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே செங்களத்துப்பட்டியில், பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று கார் மீது மோதியது. இதில், காரில் வந்த பென்னி, சீஜா, நிதின் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்