சூளகிரி:
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்தவர் லோக்கன் எம்ரான் (வயது 25). இவர் சூளகிரி பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை கோனேரிப்பள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் லோக்கன் எம்ரான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.