கார் டயர் வெடித்து ஒருவர் சாவு; 10 பேர் காயம்

கார் டயர் வெடித்து ஒருவர் இறந்தார். 10 பேர் காயம் அடைந்தனர்

Update: 2023-04-10 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் போலீஸ் சரகம் பசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராசு, ரேணுகாதேவி, உள்பட 10 பேர் காரில் இளையான்குடி அருகே உள்ள பகைவரைவென்றான் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவிற்கு சென்றனர். காரை மதுரையைச் சேர்ந்த பூவேல் என்பவர் ஓட்டி வந்தார். காதணி விழாவிற்கு சென்றுவிட்டு காரில் பசியாபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பாச்சேத்தி அருகே தூதைவிலக்கு பகுதியில் வந்தபோது, காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்றிருந்த கீரமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(65) மீது மோதி ரோட்டை விட்டு விலகி அருகில் உள்ள முள்புதரில் கவிழ்ந்தது.. இந்த விபத்தில் டிரைவர் பூவேல், ராசு, ரேணுகாதேவி, சுப்பிரமணியன் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சுப்பிரமணியன் இறந்தார். மற்ற 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்