புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து;
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டது.