தேவூர்:
தேவூர் அருகே அரசிராமணி மேட்டுப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 75), கூலி தொழிலாளி. இவர் அரசிராமணி மேட்டுப்பாளையம் திரிவேணி பாலம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மொபட் மோதி மாதவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த தேவூர் போலீசார் விரைந்து வந்தனர். மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மொபட்டில் வந்தவர் தண்ணிதாசனூரை சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.