விபத்தில் கல்லூரி மாணவர் பலி

விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-02-26 18:45 GMT

இளம்பிள்ளை:

சேலம் மாவட்டம் காக்காபாளையம் அருகே உள்ள கண்டர் குலமாணிக்கம் ஊராட்சி பெரியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளையில் இருந்து காக்காபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடுவனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மகுடஞ்சாவடி போலீசார் கீர்த்திவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்