பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 18). இவர் பால் லாரியில் கிளீனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை நந்தகுமார் பாலக்கோடு-பாப்பாரப்பட்டி சாலையில் எர்ரனஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் நந்தகுமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.