தலைவாசல் அருகே பிளஸ்-1 மாணவர் விபத்தில் பலி-அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றி விட்டு திரும்பிய போது சோகம்
தலைவாசல் அருகே பிளஸ்-1 மாணவர் விபத்தில் பலியானார். அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தலைவாசல்:
பிளஸ்-1 மாணவர் பலி
தலைவாசல் அடுத்து பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மகன் ரப்னா (வயது 16). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த 18-ந் தேதி அதிகாலை தனது அண்ணன் கருப்பையா. அண்ணி ராதா ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு பஸ் ஏற்றி விட சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில், பெரியேரி தனியார் பால் பண்ணை எதிரில் செல்வராஜ் விவசாய தோட்டம் அருகில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், இருதயராஜுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே நேரில் வந்து பார்த்தபோது மகன் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சோகம்
இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் நிலையத்தில் இருதயராஜ் புகார் ெசய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தனது அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றிவிட சென்று விட்டு திரும்பிய வரும்போது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பலியானது தெரியவந்தது.
விபத்தில் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பெரியேரி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.