ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2023-02-10 18:45 GMT

சாத்தூர்,

சாத்தூர் அருகே ஸ்ரீரெங்கபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் அதே பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் மாடசாமி புதுச்சூரங்குடியிலிருந்து பந்துவார்பட்டிக்கு பட்டாசு தொழிலாளர்களை ஏற்றுவதற்காக சென்றார். புதுச்சூரங்குடி சந்திப்பில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாடசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சூரங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், மாடசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்