பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 49). இவர் வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 4-ந் தேதி பையர்நத்தத்தில் இருந்து பொம்மிடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பி.பள்ளிப்பட்டியில் சாலையின் குறுக்கே நாய் சென்றது.
இதனால் நிலைதடுமாறிய கோவிந்தராஜ் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.