டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மளிகைக்கடை உரிமையாளர் கதிர்வேல். இவருடைய மகன் ஆகாஷ்வேல் (வயது 20). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று ஆகாஷ்வேல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு பகுதியில் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆகாஷ்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.