வாகனம் மோதி வாலிபர் பலி

Update: 2022-12-08 18:45 GMT

ஓசூர்:

போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் அருகே உள்ள சோலைவனம் கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 21). இவர் ஓசூரில் மூக்கண்டப்பள்ளி அருகே அரசனட்டி மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஆகாஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்