லாரி மோதி வியாபாரி சாவு

லாரி மோதி வியாபாரி இறந்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது58). இவர் பனைஓலையிலான முரம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரதாபராமபுரத்திற்கு தனது ஸ்கூட்டரில் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பிரதாபராமபுரம் நால்ரோடு அருகே திரும்பும்போது கோவில்பத்தில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றிவந்த லாரி திடீரென பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்