எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 32). தையல் தொழிலாளி. இவர் நேற்று தனது மொபட்டில் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்றார். அப்போது வேலாத்தா கோவில் அருகே சாலை விரிவாக்க பணி நடந்தது. அந்தசமயம் தர்மராஜ் சென்ற மொபட் எதிர்பாராதவிதமாக மண் சறுக்கி கீழே விழுந்தது. இதனால் கீேழ விழுந்த தர்மராஜ் மீது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் ஏறி இறங்கியது. இதில் தர்மராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.