வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ் (வயது 19). இவர், லாரி பட்டறையில் மெக்கானிக்காக வேைல செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ரவுண்டானா பகுதியில் லாரி சதீஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் மல்லப்பன் (67). தனியார் நிறுவன காவலாளியான இவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துகள் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.