பஸ்-லாரி மோதல்; டிரைவர்கள் காயம்
எஸ்.புதூர் அருகே தனியார் பஸ் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் காயம் அடைந்தனர். 40 பயணிகள் அதி்ர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே தனியார் பஸ் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் காயம் அடைந்தனர். 40 பயணிகள் அதி்ர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டயர் வெடித்தது
சென்னையிலிருந்து மதுரை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த டிரைவர் மகாஸ்ரீ குகன் (வயது 29) ஓட்டி வந்தார். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதிபட்டியை அடுத்த வர்ணப்பட்டி பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து தாறுமாறாக ஓடியது. மேலும் எதிரே கரூரை சேர்ந்த டிரைவர் வெள்ளைமுத்து (32) ஓட்டிவந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
பயணிகள் தப்பினர்
இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரி டிரைவர்் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் எந்தவித காயமும் இன்றி தப்பினர். காயம் அடைந்த டிரைவர்கள் துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இதற்கிடையே துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். இதன் காரணமாக மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.