கார் கவிழ்ந்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்

மானாமதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-22 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் கவிழ்ந்தது

ஈரோடு மாவட்டம் அருகே உலகடம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியகிருஷ்ணன் (வயது 45). இவருடைய மனைவி சாரதா(40), மகன்கள் தருண் பிரசாத், திவித். இந்நிலையில் புண்ணியகிருஷ்ணன் தனது மனைவி, மகன்கள் மற்றும் அவரது அண்ணன் அருண் பிரசாத், தாய் பார்வதி ஆகியோருடன் தனது காரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருங்காங்கோட்டை அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

மேலும் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த புண்ணியகிருஷ்ணன், அவரது மனைவி சாரதா, மகன்கள் தருண் பிரசாத், திவித், மற்றும் அருண் பிரசாத், பார்வதி ஆகிய 6 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புண்ணிய கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்