பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி வாலிபர் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி வாலிபர் படுகாயம்

Update: 2022-11-17 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகர் செங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் விக்னேஷ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் கதிரவன். உறவினர்களான இவர்கள் 2 பேரும் பெரியமஞ்சவாடியில் வெல்டிங் வேலைக்கு சென்றனர். பின்னர் பணி முடிந்ததும் மாலை வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். கதிரவன் பின்னால் அமர்ந்திருந்தார்.

அப்போது சேலம்- அரூர் மெயின் ரோட்டில் தண்ணீர் தொட்டி பகுதியில் வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். கதிரவன் லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்