சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

Update: 2022-11-12 21:43 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர்-பனியம்பள்ளி ரோட்டில் இச்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தார் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்காக பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை ஒட்டியே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொடர் மழையால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மாற்றுப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்