திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்-லாரி மோதி விபத்து; பயணிகள் உயிர் தப்பினர்
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்-லாரி மோதி விபத்து; பயணிகள் உயிர் தப்பினர்
தாளவாடி
ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பும்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பஸ் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.