பிளக்ஸ் பேனர் முறிந்து விழுந்து இளம் பெண் படுகாயம்

கீழக்கரையில் விளம்பர பிளக்ஸ் பேனர் முறிந்து விழுந்து இளம் காயம் அடைந்தார். இதையடுத்து கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.;

Update: 2022-11-07 13:29 GMT

கீழக்கரை, 

கீழக்கரையில் விளம்பர பிளக்ஸ் பேனர் முறிந்து விழுந்து இளம் காயம் அடைந்தார். இதையடுத்து கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

விளம்பர பேனர்

கீழக்கரை நகராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வந்த இளம் பெண் ஒருவர் கீழக்கரை முக்கு ரோடு அருகில் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனர் ஒன்று திடீரென்று முறிந்து அந்த பெண் மீது விழுந்தது.

அப்போது அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அந்தப் பெண்ணின் மீது விழுந்த பேனரை அகற்றினர். படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனே கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனி குமார் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்றினர்.

எச்சரிக்கை

மேலும் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளரை அழைத்து அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்கள் அச்சிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் கீழக்கரை பகுதியில் விளம்பர ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்