ஊத்தங்கரை:
ஊத்தங்கரை தாலுகா கல்லாவி வருவனூரை சேர்ந்தவர் பாரதி ராமன் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கல்லாவி-ஊத்தங்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். கல்லாவி அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பாரதி ராமன், சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.