ரெயிலில் அடிபட்டு வியாபாரி சாவு

ரெயிலில் அடிபட்டு வியாபாரி இறந்தார்.

Update: 2022-10-29 18:45 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் கடைவீதி கம்ப பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 72). இவர் பலகாரம் தயார் செய்து வீடு, வீடாக சென்று விற்பனை செய்து வந்தார். இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது என கூறப்படுகிறது. ஆத்தூர் லீ பஜார் அம்பேத்கர் நகர் பகுதியில் பலகார வியாபாரம் செய்துவிட்டு ெரயில்வே தண்டவாளத்தில் நடந்து கடந்து உள்ளார். அப்போது சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி பயணிகள் ரெயிலில் அடிபட்டு நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்