புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி மோதி நிழற்குடை சேதம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி மோதி நிழற்குடை சேதம்லாரி மோதி நிழற்குடை சேதம்
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் செல்லும் சாலையில் தேசிபாளையம் பிரிவு அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. நேற்று அந்த வழியாக வந்த மண் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிழற்குடை மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிழற்குடை அப்படியே உடைந்து சேதமானது. அப்போது நிழற்குடையில் யாரும் நிற்காததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மண்ணை அங்கேயே கொட்டிவிட்டு, லாரியுடன் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை வலைவீசி தேடி வருகிறார்கள்.